மேற்கத்திய நாடுகளில் பிள்ளைகளை குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை என்று மேடை பேச்சில் அவ்வப்போது கேட்கலாம். ஆனால் வளர்ந்த பிறகு பிள்ளைகளுக்காக மோசடியில் ஈடுபட்டு அவர்களை பெரிய ஆட்களாக உயர்த்த சில ஹாலிவுட் நட்சத் திரங்களே முயல்கின்றனர். அப்படியொரு சம்பவத்தில் ஈடுபட்டு சிறை செல்கிறார் ஒரு நடிகை.
கிரிட்டிக்கல் மாச், சக்கர்ஸ் நியூயார்க் கிட்ஸ், சீக்ரெட் அட்மைரர், கிராள்ஸ்பேஸ் போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் லோரி லாஹ்லின்.
கடந்த 1996 ஆண்டு முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு டிசைனரான மொஸிமோ கியானுள்ளி என்பவரை 2வதாக மணந்தார். இவர்களுக்கு இஸபெல்லா ரோஸ், ஓலிவியா ஜேட் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த கல்லூரி நுழைவு தேர்வில் மோசடி நடந்தது. 50 பேர் மீது இதில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் லோரி லாஹ்லினும் மற்றும் அவரது கணவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது இருவரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட் டனர். இதுபற்றி வழக்கு நடந்து முடிந்து தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.
நடிகை லோரி லாஹ்லின் அவரது கணவர் இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். லோரிக்கு 2 மாத சிறைத் தண்டனை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் அபராதம், 100 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும், கணவருக்கு 5 மாத சிறைத் தண்டனை, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம், 250 மணி நேரம் சமுதாய பணியாற்ற வேண்டும் தீர்ப்பு கூறப் பட்டது.
தீர்ப்பை கேட்டு கண்கலங்கிய நடிகை லோரி’என் குழந்தைகள் மீதான பாசத்தால் இதை செய்வதாக நினைத்தேன். ஆனால் அவர்களின் திறமையை குறைத்து மதிப் பிட்டுவிட்டதாக இப்போது நான் எண்ணு கிறேன்’ என்றார்.