சென்னை,
அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு, லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது தமிழக போலீஸ்.
இயக்குநர் சசிக்குமார் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புசெழியன்தான் காரணம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அன்புசெழியன் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அவமதிப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கூறி வருகின்ற னர்.
இந்நிலையில், அன்புசெழியனை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
அவர் ஏற்கனவே வெளிநாடு தப்பி விட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிவிடாதபடி அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, அனைத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.