சென்னை:

குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும், சென்னை டிரெக்கிக் கிளப் உரிமையாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள  அவர் வெளிநாடு தப்பிவிடாதபடி அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுவனப்பகுதி மலையேற்ற பயறிச்சிக்கு சென்றவர்கள், கடந்த 11ம் தேதி அந்த பகுதி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில், 36 பேர் அதில் சிக்கி கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர்  மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை டிரெக்கிங் கிளப் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு, நிறுவனத்தின் போர்டும் அகற்றப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவரும் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், பீட்டர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,  தலைமறைவாக உள்ள பீட்டர் வான்கே, வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை தமிழக போலீசார் அனுப்பி உள்ளனர்.