சென்னை: சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய லூகஃபே கழிப்பறைகள் திறக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அடையாறு உள்பட பல பகுதிகளில் 19 கழிப்பறைகள் திறக்கப்பட்டு உள்ளன.
சென்னை முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 50 கழிப்பறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனம் உடன் இணைந்து அமைக்க முன்வந்துள்ளன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த இக்சோரா எப். எம்., (Ixora FM) நிறுவனமும், மதுரையைச் சேர்ந்த ‘தூயா இன்னோவேஷன்ஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து இந்த ‘Loo Cafe’ துவக்கி உள்ளது. காபி ஷாப்புடன் இணைந்த அதிநவீன கழிப்பறைகள் கொண்ட அமைப்புதான் இந்த ‘லூஃகபே.’ இந்தக் கழிப்பறையை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்
அதன் ஒரு பகுதியாக அடையாறு பகுதியில் ‘லூகஃபே’ என்னும் அதிநவீன கழிப்பறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை அடையாறு எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அருகே, ராஜீவ் காந்தி சாலையில் ‘லூகஃபே’ என்னும் அதிநவீன கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது. ‘லூகஃபே தூயா’ என அழைக்கப்படும் இந்த கழிவறைகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளதுடன், இந்த கழிப்பறை திறப்பு விழாவின்போது, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இக்சோரா எப்.எம். நிறுவனம், மதுரையைச் சேர்ந்த தூயா இன்னோவேஷன்ஸ் தலைவர் தமிழ்மணி, தூயா இன்னோவேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் சி.ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய வகை லூகஃபே கழிப்பறையைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.