சென்னை: தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் இரவு நீண்ட மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தினசரி மழை தொடர்கிறது, நேற்று வடசென்னை, தற்போது தென்சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மீண்டும் மழை. மேகங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு மத்திய / தென் சென்னைக்குள் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது புதிய புயல்களை தூண்டினால் சென்னை முழுவதும் மழை பெய்யும். குறிப்பு, கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வேறு எங்கும் மழை பெய்யவில்லை. KTCC யின் தனிமையான நிகழ்ச்சி என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய பயங்கர இடி மின்னலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நள்ளிரவு முதல் பலரும் தூக்கத்தை தொலைத்தனர். கொட்டி தீர்த்த மழையால் சாலையெங்கும் தண்ணீர் தேங்கியது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இதைத் தொடர்ந்து தினசரி மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், , தெற்கு மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளில் இரவு நீண்ட மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தினசரி மழை தொடர்கிறது என்றும் நேற்று வடசென்னையில் மழை பெய்த நிலையில் தற்போது தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேகங்கள் வரிசையாக நிற்கிறது என்றும் இவை மத்திய மற்றும் தென் சென்னைக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் புதிய காற்றால் சென்னை முழுவதும் மழை பெய்யலாம் என்றும்கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வேறு எங்கும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் சோலோ ஷோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.