என்னை வசைத்தவரும் வாழ்க பல்லாண்டு…! சிறப்பு கவிதை – எழுத்தாளர் கவிஞர் ராஜ்குமார் மாதவன்

உடன்பிறப்பே!
திருக்குவளையில் பிறந்தேன்
திருத்தமிழை பயின்றேன்
திரு வள்ளுவனை அறிந்தேன்
திருப்பணி தேடி வெண்தாடி அடைந்தேன்
காஞ்சியை கண்டேன்
கழகம் பிறந்தது !

எழுத்தால் எழுந்தேன்
பேச்சால் உயர்ந்தேன்
திரையுலகை ஆண்டேன்
திருப்புகழை அடைந்தேன்
கல்லக்குடி கண்டேன்
தண்டவாளம் கடந்தேன்
குளித்தலை வென்றேன்
அரசவை புகுந்தேன்
இந்தியை எதிர்த்தேன்
கழகம்-அரியணை கண்டது !

காலம் கடந்தது
காஞ்சி மறைந்தது
காலம் அழைத்தது
அரியணை கிடைத்தது!

தமிழ்தாய் பாட்டிசைத்தேன்
வள்ளுவனுக்கு கோட்டமமைத்தேன்
மாநிலத்தின் உரிமைமீட்டேன்
தேசியக்கொடி ஏற்றலானேன்
அனைத்து முதல்வர்க்கும்
உரிமை கொடுத்தேன்
விதவை பெண்ணை
கைம்பெண் என்றேன்
ஊனம் என்பதை
மாற்றுத்திறன் என்றேன்
மூன்றாம் பாலை
திருநங்கை என்றேன்
ஊர் சேரி என்பதை
சமத்துவபுரம் என்றேன்
அரசு அலுவலகம்
தாளமுத்து நடராசன் என்றேன்

ஓடி உழைத்தேன்
நற்குடி உயர
உழைத்து ஓய்ந்தேன்
உருள்வண்டி சாய்ந்தேன்
ஓட்டம் நிற்கவில்லை
உருள்வண்டியும் நானுமாய்
நாட்டம் விடவில்லை
நற்றமிழர் நலனிற்காய்
காலன் பறிக்கும்வரை
சுழன்று போரிட்டேன்

உடலை பிரிந்தபின்,
என்னையும் நக்கலித்தான்,
என் ஊனத்தை எக்களித்தான்,
மூடறவன் கண்ணிருந்தும் குருடன்,
நான் ஊனிருந்தும் நாயகன்,
என் ஊனம் வயோகத்தின் கொடை,
என் ஞானம் அறிவுலகின் பீடம் !
என்னை வசைத்தவனும்,
வாசித்தவனும், வாழ்க பல்லாண்டு !
தமிழுள்ளவரை வாழ்க பல்லாண்டு !