கொழும்பு:
இலங்கை ஆற்று நீரில் கை கழுவிய லண்டன் பத்திரிக்கையாளரை முதலை கடித்து கொன்றது.
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையாளரான பால் மெக் கிளீன் (வயத 24) என்பவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றவர். பிரஞ்ச் மொழியில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர் கடந்த 2015ம் ஆண்டு பைனான்சியல் டைம்ஸ் பத்தரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். புருசேல்ஸில் 2 மாதங்கள் தங்கியிருந்த இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டன் திரும்பினார்.
இவர் தனது நண்பர்களுடன் விடுமுறை கொண்டாட்டத்திற்காக இலங்கைக்கு சென்றார். அவர் தங்கியருந்த ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த புகழ்பெற்ற கடல்நீர் சறுக்கு விளையாட்டு கடற்கரைக்கு சென்றார்.
அந்த பகுதி அருகில் ஆறு கடலில் கலக்கும் லகூன் பகுதி உள்ளது. கடலுக்கு அருகில் உள்ள ஆற்று ப குதியில் ஒரு குறிப்பிட்ட பகுதி ‘க்ரோகடைல் ராக்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு முதலைகள் நடமாட்டம் அதிகளிவில் இருக்குமாம்.
இது கடற்கரையில் இருந்து 900 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் நண்பர்களுடன் கழிப்பிடத்தை தேடி மெக் கிளீன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த ஆற்றில் கை கழுவியுள்ளார் மெக் கிளீன். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த ஒரு ராட்சத முதலை அவரை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
அவரது சத்தம் மற்றும் நண்பர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள், உள்ளூர் மக்கள் விரை ந்து ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் முதலை அவரை ஆற்றுக்குள் இழுத்து சென்றுவிட்டது. ஆற்றின் அந்த பகுதி மிகவம் ஆழமானதாகவும், மிகவும் கலங்கலாகவும் இருந்தது. அதனால் அவரை ஆற்றில் குதித்து மீட்க முடியாமல் போனது.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மெக் கிளீன் உடலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டன் தூதரக அதிகாரிகளும் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக முதலை வனப்பகுதியில் உள்ள தூய்மையான நீரில் தான் அதிகம் இருக்கும்.
உப்பு நீரில் இருந்தால் அவற்றுக்கு பார்வையிழப்பு ஏற்படுமாம். இலங்கையில் மனிதரை முதலை கடித்து கொன்ற சம்பவம் தற்போது தான் முதன் முதலாக நடந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவி க்கின்றன.