கராகஸ்:

வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்க முயல் கறி சாப்பிட வேண்டும் என்று அ ந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கேட்டுக் கொண்டுள்ளார்.

முயல் திட்டம் என்று பெயரிட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தை அவர் அறிமுகம் செய்து ஊக்குவித்து வருகிறார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த ஹூகோ சாவேஸ் மற்றும் தற்போதைய அதிபரின் சோசலிச கொள்கைளால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் நோய்களுக்கு போதுமான அளவில் மருந்துகள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு மக்களில் 75 சதவீதம் பேர் உணவு பற்றாகுறையால் கடந்த ஆண்டு சராசரியாக தலா 19 பவுண்டுகளை இழந்திருப்பதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் நாட்டு மக்களிடம் பேசுகையில், ‘‘ இதர இறை ச்சிகளின் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் கிடைக்கும் முயல்களை மக்கள் சாப்பிட தொடங்க வேண்டும். விலங்கு புரத் சத்துக்காக முயல்களை சாப்பிடும் வகையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த 15 சமுதாய மக்களிடம் முயல்கள் வழங்கப்பட்டது. ஆனால், அந்த மக்கள் அவற்றை செல்லப் பிராணிகளை வளர்க்க தொடங்கிவிட்டனர். பலரும் படுக்கை அறை வரை அவற்றை கொண்டு செல்லும் நிலை உருவாகயுள்ளது. அதனால் இந்த திட்டம் தோல்வியை அடைந்தது. இதனால் இது கலாச்சார பிரச்னையாக தற்போது உருவாகிவிட்டது.

அதனால் ‘‘முயல்கள் வளர்ப்பு பிராணிகள் கிடையாது. இரண்டு மாதத்தில் இரண்டரை கிலோ வரை வளர க்கூடிய இறைச்சி’’ என்று அரசு தற்போது பிரச்சாரம் செய்து வருகிறது. ‘‘இது ஒரு மோசமான நகை ச்சுவை’’ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ‘‘மக்களை முட்டாள்கள் என அதிபர் நினைத்துள்ளார்’’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.