லண்டன்:

அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தபோது, கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில்  பிப்ரவரி 2020ம் ஆண்டுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை ஹேக் செய்து, வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கி லீக்ஸ் நிறுவனம் ஜூலியன் அசாஞ்சே. இதன் காரணமாக, அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக தேடி வந்தது.

இந்த நிலையில், ஈக்வடார் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த அசாஞ்சேவின் குடியுரிமையை அந்நாட்டு ரத்து செய்ததால, அவர் இங்கிலாந்தில் தலைமறைவானர். ஆனால், இங்கிலாந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், , ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அமெரிக்கா சார்பில் இங்கிலாந்து அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது இதற்கு இங்கிலாந்து அரசும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.