லண்டன் மாநகரின் முதல் முஸ்லிம் மேயராக ‘சாதிக் கான்’ வெற்றிபெற்றார் !
தற்போது லண்டன் மேயராக இருக்கு போரிஸ் ஜான்சனின் பதிவிகாலம் முடிவடைந்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க லண்டன் வாசிகள் மே 5ம் தேதி வியாழக்கிழமையன்று வாக்களித்தனர். அதன் முடிவுகள் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
தொழிலாளர் கட்சியின் வேட்பாளரான சாதிக் கான் மிகப்பெரும் செல்வந்தரான சாக் கோல்ட் ஸ்மித்தை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.
அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சத வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித் 43.2 சதவீத வாக்குகள் பெற்றார். சாதிக் கான் 11,48,716 முதல் விருப்ப வாக்குகளும், 161427 இரண்டாவது விருப்ப வாக்குகளும் சேர்த்து மொத்தம் 13,10,143 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சாதிக் கான் 9,09,775 முதல் விருப்ப வாக்குகளும், 84,859 இரண்டாவது விருப்ப வாக்குகளும் சேர்த்து மொத்தம் 9,94,614 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து களம் கண்ட கன்செர்வேடிவ் கட்சியின் வேட்பாளரும் கோடிஸ்வரருமான ஆன சாக் கோல்ட் ஸ்மித்தை தோற்கடித்து இவர் வெற்றியை சுவைத்துள்ளார்.
இவர்களைத் தவிர கரோலின் பிட்ஜென் (லிப் டெம்ஸ்), சியான் பெர்ரி (கிரீன்ஸ்), ஜியார்ஜ் கல்லவே (ரெஸ்பெக்ட்) மற்றும் சோஃபி வாக்கர் (பெண்கள் சமத்துவக் கட்சி) மற்றும் பீட்டர் விட்டி (யூ.கே.ஐ.பி) உட்பட மேலும் பத்து வேட்பாளர்கள் களத்தில் மோதினர்.
போரிஸ் ஜான்சனுக்கு அடுத்தபடியாய் அவரது இடத்தை பிடிக்க போட்டியிட்டவர் சாக் கோல்ட் ஸ்மித் பெரும் பணக்காரர். சாதிக் எதிர்கொண்ட முக்கிய சவால் இவர் தான்.
டொரியின் எட்டாண்டு சகாப்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம், இவர் முதல் கறுப்பின மேயர் எனும் பெருமையை அடைகின்றார். வெஸ்ட்மின்ஸ்டருக்கு அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கப்படும் லேபர் கட்சியின் மூத்த தலைவர் சாதிக் கான் ஆவார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளோடு தொடர்புடையவர் என்று கன்சர்வேடிவ் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட கான், “அச்சுறுத்தும் அரசியலை” வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
தமது இந்த வெற்றி தம்மை நெகிழ வைத்ததாக சாதிக் கான் தெரிவித்தார். துவேசத்தை தோற்கடித்து அன்பையும், வேற்றுமையை தோற்கடித்து ஒற்றுமையை லண்டன் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் கூறினார். தம்முடைய பிரச்சாரத்தின் போது, விலை குறைந்த வீடுகளை கட்டப்போவதாக உறுதியளித்திருந்தார். பொதுப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளார்.
ஜெரிமி கார்பின் கானுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் “வாழ்த்துக்கள் சாதிக் கான் ! எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கும் லண்டனை உருவாக்க இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிநோக்கியுள்ளேன் ” என ஜெரிமி கோர்பின் ட்விட் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
சாதிக் கான் கடந்து வந்த பாதை :
இவர் இப்போது போட்டியிட்ட டூட்டிங் தொகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் பிறந்தவர். இவரது தந்தை பாகிஸ்தானில் பேருந்து ஓட்டுநராய் இருந்து 1960ல் குடிபெயர்ந்தார். இவரது தாய் பல்வேறு வேலைகளை செய்தவர். கானுக்கு எழு சகோரரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். ஆறு பேர் சிறந்த கல்வி பயின்றனர். ஒருவர் மெக்கானிக் ஆனார்.
ஸ்டம்ஃபொர்ட் ப்ரிட்ஜ்-யில் அசிங்கப்படுத்தப்பட்டபிறகு லிவர்பூல் ரசிகரானார். விளையாட்டுகளில் பேரார்வம் கொண்ட கான், சிலகாலம் கவுண்டி கிரிக்கெட் விளையாடி யுள்ளார். இவரும் இவரது சகோதரரும் பாக்ஸிங் விளையாட்டை முக்கிய விளையாட்டாய் எடுத்துக் கொண்டனர்.
லண்டன் பலகலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர்மனித உரிமைச் சட்டத்தில் தனிச்சிறப்பு பெற்றார். மூன்றாண்டுகள் சிவில் லெபர்டி குரூப்பின் தலைவராய் இருந்தார். வேண்ட்ஸ்வொர்த் கவுன்சிலராய் தேந்தெடுக்கப்பட்டார். 2005ல், டூடிங்க் தொகுதியின் எம்.பி. ஆனார். சிறப்பாய் செயல்பட்டு 2006 ஆண்டு கவுரவிக்கப்பட்டார். பிறகு அமைச்சராக்கப்பட்டு, கொர்டான் பிரவுன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சரானார். கேபினட் பொறுப்பு பெற்ற முதல் முஸ்லிம் எனும் பெயரைப் பெற்றார்.
காதல் மன்னன்.. இவர் தன் அன்பு மனைவியை மெக் டொனால்ட் உணவை வாங்கிக்கொடுத்து காதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு பதின்ம வயது மகள்கள் உள்ளனர்.
ஜெரீமி கார்பின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாய் பிரச்சாரமேற்கொண்டது இவருக்கு கார்பினின் ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெற உதவியது. எனினும் கார்பினின் கைப்பாவையாக இருக்க இவர் விரும்பியதில்லை. கார்பின் தேசிய கீதம் பாடாமல் விமர்சிக்கப்பட்ட பொழுது கானும் கார்பினை கடுமையாக விமர்சித்தார்.
இரண்டு முறை லண்டன் மேயராய் இருந்த போரிஸ் ஜான்சன் அவரது கன்செர்வேடிவ் கட்சியின் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அடுத்தபடியாக, பிரதமர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருகின்றார். அவரது எதிர்கால ஆசையை வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டார்.