ஜப்பான் எங்கும் மின் வாகன மின்னூட்டும் நிலையங்கள் திறப்பு

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

ஜப்பானில் இப்போது எரிவாயு நிலையங்களை விட எலக்ட்ரிக் கார் சார்ஜ் இடங்கள் அதிகமாக உள்ளன

japan 2நவீன மின்சார கார்களை உபயோகிக்கும் உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது. மின்சார காரை விரைவாக சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் நீண்ட காலமாக ஜப்பான் ஒரு பிரகாசிக்கும் உதாரணமாக கருதப்படுகிறது.

வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் ஒவ்வொரு பிரதான வழியிலும் CHAdeMO டிசி விரைவான சார்ஜர்கள் உள்ளன. ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள 1532 சார்ஜர்கள் மற்றும் அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள 854 சார்ஜர்களை விட அதிகமாக இந்த மாத தொடக்கத்தில், நாடு முழுவதும் 2,819 க்கும் மேற்பட்ட CHAdeMO DC விரைவு சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளன.

japan gas 1

தனியார் மற்றும் பொது இரண்டுக்கும் சொந்தமான குறைந்த-சக்தி 2 ஆம் நிலை சார்ஜ் வசதியோடு இணைந்து அணுகமுடிந்த, நம்பகமான அதிக எண்ணிக்கையிலான சார்ஜ் நிலையங்கள் இருப்பது, ஜப்பானில் இப்போது எரிவாயு நிலையங்களை விட பிரத்யேகமான சார்ஜ் நிலையங்கள் உள்ளதாக அர்த்தம்.

இப்போது 34,000 எரிவாயு நிலையங்களை விட ஜப்பானில் 40,000 க்கும் மேற்பட்ட சார்ஜ் நிலையங்கள் இருப்பதாக, நிசான் கூறுகிறது. எனினும், ஜப்பானில் உள்ள பெரும்பாலான எரிவாயு நிலையங்கள் போல் அல்லாமல், நிஸ்ஸான் மேற்கோளிட்ட 40,000 மின்சார கார் சார்ஜ் நிலையங்களில் தனியார் வீடுகளில் உள்ள சார்ஜ் பாயின்ட்களும் அதில் அடங்கும். ஒரு சார்ஜ் நிலையம் தனியாருக்குச் சொந்தமான கடையில் மறைந்து இருந்தது என்றால், அது பொதுமக்களுக்கு எளிதாக அணுகும் நிலையில் இருக்காது.

japan 3PlugShare.com  போன்ற சார்ஜர்-பகிர்வு தளங்களின் எழுச்சி, வழக்கத்தை விட பலர் பொதுநல எண்ணத்தினாலோ அல்லது பணத்திற்காகவோ தனியார் சார்ஜ் நிலையங்களை மற்றவர்களின் உபயோகத்திற்காக கொடுக்கின்றனர். மின்சார கார்களை ஆதரிக்கும் பொருட்டு, ஜப்பான் நாட்டினுடைய ஆரோக்கியமான, வலுவான சார்ஜ் நெட்வொர்க் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும், =-)ஏனென்றால் CHAdeMO டிசி விரைவான சார்ஜிங்க் இருந்தாலும் கூட, அது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற ஒரு திரவம் சார்ந்த எரிபொருள் போல விரைவாக எரிபொருள் நிரப்பாது.

அடுத்து ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் இருந்து சவால் வருகிறது. இன்றைய தேதி வரை ஜப்பானிய அரசாங்கம் மின்சார வாகன உள்கட்டமைப்பிற்கு ஆதரவு கொடுப்பதில் மிகவும் திறனுடன் செயல்பட்டு வந்துள்ள போதிலும், தற்போதைய நிர்வாகம் மின்சார வாகனங்களை விட ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்துற்காகவே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, அது ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை விரைவாக  ஏற்கத் தயாரக இருப்பவர்களை தாராளமாக ஊக்குவித்து ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை ஜப்பானிய சந்தையில் கொண்டு வர முயற்சிக்கும்  டொயோட்டா, ஹோண்டா, மற்றும் நிசான் போன்ற கார் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்க அதிக முதலீடு செய்து வருகிறது.

தற்போதைக்கு ஹைட்ரஜன் எரிபொருள் கார் உருவக்குவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று கூறிய நிசான், சமீபத்தில் எரிபொருள் செல் வாகனங்கள் மற்றும் ஒரு புத்தம் புதிய ஹைட்ரஜன் நிரப்பும் உள்கட்டமைப்பை பிரபலப்படுத்த உதவும் பொருட்டு டொயோட்டா மற்றும் ஹோண்டாவுடன் இணைந்து வேலை செய்ய ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் நம் மனதில் ஒரு கேள்வி தான் எழுகிறது; அரசாங்கத்தின் கவனம் வேறுபக்கம் திரும்பி இருக்க மின்சார கார் சார்ஜ் நிலையங்கள் ஜப்பானில் தொடர்ந்து வளருமா?

 

More articles

Latest article