திருவள்ளூர்: ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே குமாரராஜப்பேட்டை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை செலத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் குமாரராஜப்பேட்டையில் இன்னும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அந்த பகுதிமக்கள் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 976 வாக்காளர்கள் உள்ள நிலையில், இக்கிராமத்தில் காலை 10 மணிவரை ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை. இதையடுத்து, கிராம மக்களிடம் மாவட்ட அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்