சென்னை:
நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர் காணல் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேர் காணல் தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி உள்பட 9 கட்சிகள் மற்றும் 14 சிறுகட்சிகள் அதரவுடன் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப முள்ளவர்கள், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்திருந்தது. ஏராளமான திமுக நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழியும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், வேட்பாளர் நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் , பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டிஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வேடபாளர்களுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் திமுக மும்முரம் காட்டி வருகிறது..