இதற்கிடையில்,  மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை அடுத்து அவை நிகழ்வுகள் தொடங்கியது. இன்று நாடாளுமன்ற அவைகளில் அப்ரேஷன் சிந்தூர் பற்றிய விவாதங்கள் நிகழும் என கூறப்பட்டிருந்த நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்துள்ள நிலையில், மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை முடங்கியது. இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பிய நிலையில், மீண்டும் பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

[youtube-feed feed=1]