சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதிகபட்ச வாக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நடைபெற்றுள்ளது.

ன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதம், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.  வேலூர், சிதம்பரம் மக்களவை தொகுதிகளில் தலா 23.46 சதவீதம், மதுரையில் 22.35 சதவீதம், திருச்சியில் 22.77 சதவீதம், திருப்பூரில் 22 சதவீதம், கிருஷ்ணகிரியில் 23.97 சதவீதம், மயிலாடுதுறையில் 23.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், தேனியில் 25.75 சதவீதம், திண்டுக்கல்லில் 25.85 சதவீதம், திருவள்ளூர் 22.60 சதவீதம் வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.09 வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு விவரம்: