சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 11 நாட்கள்  மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய தொகுதிகளில்  தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.

திமுக கூட்டணியில்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. ஆனால், மநீமவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படும் என திமுக தலைமை வாக்குறுதி அளித்துள்ளது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக கமல்ஹாசன் 11 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, வரும் 29ந்தேதி தொடங்கும் அவரது பிரசார பயணம்,  ஏப்ரல் 16ந்தேதிவரை நடைபெற உள்ளது.

இதுகுறித்த  தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ள நடாளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கறிர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 12 நாடாளுமன்ற தொகுதிகளில் 11 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.