சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வெற்றிபெறப் போவது யார் என்பது குறித்த தந்தி டிவி கருத்துகணிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், மொத்தமுள்ள 39 தொகுதி களில் திமுக கூட்டணி 29 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் இழுபறி என்று குறிப்பிட்டுள்ளது.
அதுபோல, தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தி.மு.க. கூட்டணிக்கு 23 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 4முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணிக்கு 34 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதாவது, திமுக 34 இடங்களில் வெல்லும். பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். 5 இடங்களில் இழுபறி நீடிக்கும் என்றும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. குறிப்பிட்டுள்ளது.
அதாவது, திமுகவிற்கு 42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு 34 சதவிகிதம் பேரும், பாஜகவிற்கு 18 சதவிகிதம் பேரும், நாம் தமிழருக்கு 5 சதவிகிதம் பேருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும் என்றும், கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). ஈரோடு, 2). தூத்துக்குடி, 3). வடசென்னை, 4). மத்திய சென்னை, 5). நீலகிரி, 6). ஆரணி, 7) சேலம், 8) பொள்ளாச்சி, 9) அரக்கோணம், 10) தென்காசி, 11) பெரம்பலூர், 12) காஞ்சிபுரம், 13) தேனி, 14) நாமக்கல், 15) தஞ்சாவூர், 16) தர்மபுரி, 17) தென்சென்னை, 18) திருவண்ணாமலை, 19) ஸ்ரீபெரும்புதூர், 20) கோயம்புத்தூர் தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
மேலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலும் பெரும்பாலான தொகுதிகள் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளதுடன், கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரமாதமாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதுபோல, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. திருச்சி தொகுதியில் ம.தி.மு.க.,வுக்கு நூலிழையில் வெற்றி வாய்ப்புள்ளது என்றும், அ.தி.மு.க கடும் போட்டி கொடுக்கிறது ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், கடும் போட்டி நிலவுகிறது என்றும், வேலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி நிலவுகிறது, இதில் கடைசி நேர மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், வேலூர் தொகுதியில் ஏ.சி சண்முகம் கதிர் ஆனந்த் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதங்கள் விவரம்:
திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
திமுக மட்டும் 33.52% வாக்கு சதவிகிதங்களை பெற்றது.
காங்கிரஸ் 12.61% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக கூட்டணி 30.57% வாக்கு பெற்றது.
அதிமுக மட்டும் 19.39% வாக்கு சதவிகிதங்களை பெற்றது.
பாஜக 3.66% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாமக 5.36% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
தேமுதிக 2.16% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
நாம் தமிழர் கட்சி 3.90% வாக்கு சதவிகிதங்களை பெற்றது.
இதற்கிடையில் தினமலர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,
தி.மு.க., கூட்டணிக்கு மற்ற 23 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணி தென் சென்னை, சேலம் மற்றும் ஈரோடு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும்,
பா.ஜ., கூட்டணி வேலுார், தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், பெரம்பலுார், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி என 13 தொகுதிகளில் தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாளை மறுதினம் வாக்குப்பதிவு: வோட்டர் ஐடி இல்லாதவர்களில் 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்…