சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை ( ஏப்ரல் 18)   நடைபெறுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6மணியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது.  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்பட 12 ஆவணங்களை  பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளருது.

முதற்கட்ட தேர்தலானது  தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் (ஏப்ரல் 19-ந் தேதி)  வாக்குப்பதிவு நாளை  நடை பெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி,  அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்  நடைபெறுகிறது.  தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்பட  உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.  அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில்  மொத்தமுள்ள  39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில்,  ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு தொடங்குகிறது.  வாக்குப்பதிவானது  நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்பட 12 ஆவணங்களை  பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: வோட்டர் ஐடி இல்லாதவர்களில் 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்…