தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர், தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் சொத்துக்காக பலர் தாங்கள் அவரது வாரி என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால், ஜெ.தீபா, தீபன் ஆகியோர்தான் (ஜெ.அண்ணன் மகன், மகள்) ஜெயலதாவின் வாரிசுகள் என நீதிமன்றம் கூறி, ஜெ.தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இருந்தாலும் மேலும் சிலர் தாங்கள்தான் ஜெயலலிதான் உண்மையான மகள் என கூறி வந்தனர்.
அதுபோல, உருவ ஒற்றுமையில் ஜெயலலிதா போல காணப்படும், ஜெயலட்சுமி என்ற பெண், நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீதியை கிளப்பினார்.ஜெயலலிதா போல மேக்கப் போட்டுக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயலலிதா தான் என் தாய், ஜெயலலிதாவை இதுவரை நான் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன் ஒருமுறை அவர் முதல்வராக இருந்தபோதும் மற்றொரு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சந்தித்துள்ளேன் என்றவர், நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று வெளிப்படையாக கூற முடியாத நிலை எனக்கு என்று கூறிய அவர் ஜெயலலிதா அவர்களுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபு அவர்களுக்கும் பிறந்தவர் நான் என்று கூறியதோடு ஜெயலலிதா திரையுலக வாழ்க்கையின் போது எந்த வீட்டில் வசித்தாரோ அதே வீட்டில் தான் அவர் சேர்ந்து வருகிறேன் அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா அவர்கள் எழுதிய டைரி ஒன்று என்னிடம் இருக்கு அவருடைய ஆடைகளும் என்னிடம் தான் இருக்கிறது நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்தையும் நீதி மன்றத்தில் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன அவர் மரணத்திற்கு பலர் காரணம் என்று பகீர் குற்றச்சாட்டை வீவிசானர்.
ஆனால், பின்னர் அவர் காணாமல் போனார். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மீண்டும் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், ஜெ.மகள் என கூறிகொள்ளும் ஜெயலட்சுமி என்ற பெண் தேனி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், யாருடனும் கூட்டணி வைக்காமல் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பிரேமா என்ற ஜெ.ஜெயலட்சுமி என்கிற நான் உங்கள் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் மகள். நான் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். இங்கு மனுதாக்கல் செய்திருக்கிறேன் என்றவர், நான் வெற்றி பெற்றால், எல்லா சின்ன சின்ன கிராமத்திற்கும் சென்று, என்ன குறைகள் இருக்கிறதோ அதை சரி செய்வேன்.
அம்மா தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறார்கள், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும் சரி, இதற்கு முந்தைய ஆட்சியாளர் களும் சரி, அதை சரிவரை நிறைவேற்றவில்லை. எனவே, அத்தகைய திட்டத்தை கையில் எடுத்து சரிசெய்ய போகிறோம். நான் எந்த கட்சி சார்பாகவும் போட்டியிடவில்லை. சுயேட்சையாகவே தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன்.
ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும் நோக்கில், எம்.ஜி.ஆர்., அம்மா மக்கள் கழகம் என்ற கட்சியை தொடங்கினேன். அதற்கான பதிவு எண் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், சுயேச்சையாக போட்டிகிறேன் என்றவர், தேனி தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்டிமென்டான தொகுதி. எப்போதும், அவருக்கு தேனி மக்கள் என்றால் தனிபாசம். இந்த மாவட்டத்தில் சில மக்கள் என்னிடம் வந்து இந்த தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார்கள். அதன் காரணமாக தேனி தொகுதியை தேர்வு செய்தேன்” என்றார்.