டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக,  மத்தியஅரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான  விவாதங்கள் நாளை நடைபெற உள்ளது.  இந்த நிலையில், இன்று காலை அவை தொடங்கியதும்,  மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய நிலையில், தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் 13-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.