னாஜி

ணிம சுரங்க ஒப்பந்தத்தை நீட்டித்ததற்காக கோவாவின் முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகருக்கு லோக் ஆயுக்தா நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

கோவாவில் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பரில் இருந்து 2015ஆம் வருடம் ஜனவரி வரை 88 கணிம சுரங்கங்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப் பட்டது.   இதனால் அரசுக்கு ரூ.144,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கோவா ஃபவுண்டேஷன் என்னும் அரசு சாரா அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது.    உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் அரசு விதிகளையும் மீறி இந்த நீட்டிப்பு நிகழ்ந்ததாகவும் இதில் கோவா மாநில முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் உட்பட பலரும் சம்பந்தப் பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.    அந்த தீர்ப்பில் அனைத்து ஒப்பந்த நீட்டிப்புக்களையும் ரத்து செய்துள்ளது.    சென்ற மாதம் 16ஆம் தேதியுடன் அனைத்து சுரங்கப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

தற்போது கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர், மற்றும் முன்னாள் சுரங்கத்துறை செயலாளர் பவன்குமார் செயின் ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிபதி மிஸ்ரா நேற்று நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்.    அத்துடன் இந்த நோட்டிஸ் தற்போதைய சுரங்கத் துறை செயலாளர் பிரசன்னா ஆசாரியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  இந்த நோட்டிசுக்கு வரும் மே மாதம் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.