கொல்கத்தா:
நாட்டில் கொரோனா பரவ இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொது நிகழ்ச்சியில் அவர்கள்மீது பழி சுமத்தி மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பி லாக்கெட் சாட்டர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பிரபல நடிகையும், மேற்க வங்க பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான லாக்கெட் சட்டர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர், இந்தியாவில் கொரோனா பரவ இஸ்லாமியர்கள்தான் காரணம் என கடுமையாக விமர்சித்து வந்தவர். ஆனால், தற்போது அவர் கொரோனாவிடம் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தக்லிப் ஜமாத் நடத்திய மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் மூலம் கொரோனா பரவல் உறுதியானது. அங்கு தங்கியிருந்த பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து, அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
ஆனால், கொரோனாவுக்கு ஜாதி மதம் இனம் கிடையாது என்பது, அதன் தாக்குதலில் தெரிய வந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் முதல் உயர்பதவியில் இருப்பவர் வரை அனைவரையும் தொற்றிக்கொண்டு மிரட்டி வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர் நடிகை லாக்கெட் சாட்டர்ஜி (வயது 48) கடந்த சில தினங்களாக லேசான காச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் இருந்த அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், லாக்கெட் சாட்டர்ஜி கடந்த ஏப்ரல் மாதம் தனது தொகுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இந்தியாவில் கொரோனா பரவல் இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று மதத் துவேசத்தை வளர்க்கும் வகையில் பொதுமக்களிடையே பேசியதுடன், கொரோனா பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் பெயர்களையும் வெளிப்படையாக அறிவித்தும், மக்களிடையே மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்டார். எம்.பி.யின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால்… பாவம் இன்று…கொரோனாவிடம் சிக்கி, அதில் இருந்து தப்பிக்க சிகிச்சை பெற்று வருகிறார்.. தன் வினை தன்னைச்சுடும் என்பது இவரது விஷயத்தில் நிரூபணமாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel