சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது.

தமிகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 7வது கட்டமாக லாக்டவுன்  பல்வேறு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ம் தேதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறி செல்பவர்களை மடக்கும்  காவல்துறையினர் அவர்கள்மீத நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுவரை  லாக்டவுன் விதிகளை மீறி சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை  ரூ.19.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், தற்போதுவரை  6.68 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுவரை 9.46 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் 8.58 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது