சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி  (7/5/2020) ரூ.5 கோடியை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி 4 கோடியே 91லட்சத்து, 79ஆயிரத்து 379 அபராதம் வசூலாகி உள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், முறையான ஆவனங்கள் இன்று செல்பவர்களை காவல்துறையினர் மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 10 மணி நிலவரப்படி,  இதுவரை 3 லட்சத்து, 75 ஆயிரத்து 792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றியது தொடர்பாக  4 லட்சத்து 54ஆயிரத்து 016 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 015 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலையில்,  இதுவரை  ரூ.4  கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.