சென்னை:
மிழகத்தில் ஊரடங்கை மீறயிதாக, ஜூலை 12ந்தேதி மாலை  வரை ரூ.17.90 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கை மீறி செல்வேரை காவல்துறையினர் தடுத்து, வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய வகையில் இதுவரை  8,47,574 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 6,33,555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7,72,585 வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதுவரை ரூ.17.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில்  பொதுமுடக்க விதி மீறியதாக  825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 825 வழக்குகளும், அது தொடர்பாக 141 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உளளது.