சென்னை: கொரோனா பொதுமுடக்க்ததில் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்ததால், பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகளை ஜூன் 25ந்தேதி தமிழகஅரசு அறிவித்தது. மேலும் சில தளர்வுகளோடு ஜூலை 5ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை உள்ளிட் ட நான்கு மாவட்டங்களில் கோயில்கள், வணிக வளாகங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. பிற மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தொற்று பாதிப்பு கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 27 மாவட்டங்ஙகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து, கடைகள், மால்கள் என அனைத்தும் கொரோனா விதிமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேற்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும் 4,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 5,537 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், திருப்பூரில் 7 பேரும். திருச்சியில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 38,191 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும் 17 மாவட்டங்களில் நேற்றைய தொற்று எண்ணிக்கை விட இன்று அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. அதாவது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள 27 ல் 17 மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
தர்மபுரியில் நேற்றைய பாதிப்பு 105 ஆக இருந்த நிலையில் இன்று 114 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் திண்டுக்கலில் நேற்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 54 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 199 பேருக்கு புதிதாக தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 74 பேருக்கு கூடுதலாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சியில் நேற்று 170 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 205 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் நேற்று 48 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இன்று அந்த எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியின் பாதிப்பு 59 லிருந்து 75 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் ,திருப்பத்தூர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பத்துக்கும் குறைவாகவே கூடுதல் புதிய தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு வழங்கியுள்ள தளர்வுகள் காரணமாக தொற்று உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.