டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
மே 17 வரை அமல்படுத்தப்பட்ட 3ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்து பிறப்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்றுநோய்களின் ஹாட்ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் கடுமையான நெறிமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மற்ற நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel