சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் (30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. இதற்கிடையில் 6வது கட்ட ஊரடங்கு நாளை மறுதினம் (ஜூலை) 31ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், கொரோனா மேலும் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா அல்லது தளர்வுகள் அறிவிக்கலாமா என்பது குறித்து நாளை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (ஜூலை 30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வுகள் பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.