சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  தற்போதைய நிலையில்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், லாக்டவுனை மேலும்,  நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார்  3 மணி நேரம் நீட்டித்த அந்த ஆலோசனை கூட்டத்தில்,  ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு, தளர்வுகள் உட்பட பல நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கிறதா, இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு தமிழக மக்களிடையே  உரையாற்றவிருக்கிறார். அப்போது பல முக்கிய தகவல்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.