சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளுடன் 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் டிசம்பர் 7 முதல் வகுப்புகள் தொடங்கும்.
மருத்துவப் படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்
கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளநிலை வகுப்புகள் தொடங்கும்<
விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி
டிசம்பர் 14ஆம் தேதி முதல் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி
டிசம்பர் 1 முதல் உள்ள உள்அரங்கங்களில் சமுதாய , அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள்ள அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்
பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.