டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். பீகாரில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜுன் 8ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவு. தலைநகர் டெல்லியில் தளர்வுகளுடன் ஊரடங்கு மே 7ந்தேதி வரை நீட்டிக்கங்பபட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .தற்போதைய நடைமுறையில் உள்ள தளர்வு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்த்தானம் ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா வழங்கும் லேகியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.லேகியத்தை மட்டும் வழங்கலாம் என்றும் கண்ணில் விடப்படும் சொட்டு மருந்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பீகாரிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜுன் 8ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜூன் 7ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு நீடிக்குஅம என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.