டெல்லி: நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தற்போது 3ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் மோடி 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமான முறையில் இருக்கும் என்றார்.
ஊரடங்கை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்றார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு அறிவிக்க உள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]