சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9629 ஊரடங்கு மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து ஆறாம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் பரவி வருவதால் இரண்டாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கபட்டுளது. இதில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறியதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9629 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மொத்தம் 11377 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8587 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 3.34 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நேற்று முதல் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக வரும் போது வாகன உரிமையாளர்கள் ஆர் சி புத்தக அசல் மற்றும் நகல் ஆகியவற்றோடு ஓட்டுநர் உரிமம் அசல் மற்றும் நகலையும் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.