சென்னை
மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ஜூன் 30 வரை இந்த ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த 14/06/21 முதல் 21/06/21 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
- அனைத்துக் கடைகளும் குளிர் சாதன வசதி இன்று சமுக இடைவெளியுடன் மக்கள் வந்து போகும் அளவுக்குக் குறைந்த பேர்களுடன் இயங்க வேண்டும். கடைகளுக்கு வருவோரும் ஊழியர்களும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும். நுழை வாயிலில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர அனுமதிக்கப்படும்.
- தவிர கீழ்க்கண்ட பணிகளுக்கும் அனுமதி அளிக்கபட்டுள்ளது
- காலை 6 மணி முதல் மாலை5 வரை முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி
- காலை 6 முதல் 9 மணி வரை பூங்காக்களில் நடைப்பயிற்சிக்கு அனுமதி
- டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
- மொபைல் மற்றும் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்குக் காலை 9 மணி முதல் மாலை 2 வரை அனுமதி. மேலும் இதே நேரத்தில் கட்டுமான பொருட்கள், மிக்சி, டிவி பிரிட்ஜ் விற்கும் கடைகள், ஆகியவற்றுக்கும் அனுமதி
- தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம். ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்,
- ஐடி நிறுவனங்கள் 20% ஊழியர்களுடன் இயங்கவும் காப்பீட்டு மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கவும் அனுமதி
- ஆயினும் பாதிப்பு அதிகம் உள்ள, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் ஆகியவை இ பதிவுடன் அனுமதிக்கப்படும். மின் பணியாளர், குழாய்ப்பணியாளர், கணினி பழுது நீக்குவோர், தச்சர், மோட்டார் மெக்கானிக்குகள், ஆகியவர்கள் இ பதிவுடன் வீடுகளுக்குச் சென்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை பணி புரியலாம், இவர்கள் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
- இரு சக்கர வாகனங்கள் மிதி வண்டி ஆகியவை பழுது பார்க்கும் கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை அனுமதி
- காலை 9 மணி முதல் 2 வரை வேளான் உபகரணங்கள், பம்பு செட் ரிப்பேர் மட்டும் அனுமதி.
- இதே நேரத்தில் கண்கண்ணாடி விற்பனையும் அனுமதி