தஞ்சை: ராஜராஜ சோழனின் 1034வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலை மன்னன் ராஜராஜ சோழன் கட்டினார். தஞ்சை பகுதியை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழா, சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

1034வது சதய விழா அங்கு வரும் 6ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதனை ன்னிட்டு தஞ்சையில் அன்றைய தினம், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை அடுத்து, நவம்பர் 6ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 23ம் தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

சதய விழா நாளான, வரும் 6ம் தேதி, ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த 2 நாட்களும், பட்டிமன்றம், நாட்டியம், நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தவிர, பெருவுடையார், பெரியநாயகிக்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.சதய விழாவிற்காக, பெரியகோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி, நடைபெற்றது. அப்போது, பந்தல் காலுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.