சென்னை:
ள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.
dmk-office
இந்நிலையில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி
காங்கிரசுக்கு 7 வார்டுகள்  ஒதுக்கப்பட்டுள்ளன:   6, 25, 35, 39, 50, 58, 59  ஆகியவை.
இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்:  20, 53 ஆகியவை
சேலம் மாநகராட்சி
காங்கிரசுக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன:  8, 9, 16, 17, 36 ஆகியவை.
சேலத்தில் 19-வது வார்டு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக போட்டியிடும் வார்டுகள்:  1, 2, 3, 4, 5, 7, 10, 11, 12, 13, 14, 15, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46  ஆகிய வார்டுகளில் போட்டியிடுகிறது.

திருச்சி மாநகராட்சி
காங்கிரசுக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன:  14, 37, 44 ஆகியவை. திருச்சியில் சாருபாலா போட்டியிடும் வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள 5, 6, 19, 28, 35, 50, 54, 64, 65 ஆகிய வார்டுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
திருச்சி 42-வது வார்டில் திமுக சார்பில் காஜாமலை விஜய் போட்டியிடுகிறார்.
46-வது வார்டில் திமுக சார்பில் டி.ராமமூர்த்தி,
57-வது வார்டில், விஜயா ஜெயராஜ்,
45-வது வார்டில் வெ.ராமதாஸ், போட்டியிடுகின்றனர்.
இதில் விஜயா ஜெயராஜ் கடந்த முறை மேயர் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.