திருப்பதி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
உலகின் பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான தரிசிக்கவும் கொரோனா தொற்று தடை போட்டுவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமல் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது ஆந்திராவில் தொற்று ஓரளவு கட்டுக்குள் இருப்பதால், முதல்கட்டமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் 6 அடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம். மேலும் திருப்பதி கோவிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.