சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறை களை தமிழகஅரசு வெளியிட்டிருந்தது.  மேலும்,  வாக்குச்சாவடிகள், தேர்தல் இயந்திரங்கள், வாக்குச் சீட்டு போன்றை அச்சிடுவது குறித்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தமிழக முதல்வர், துணைமுதல்வரும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி,  சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 6ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வட்டத்தில்  இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கூட்டணியை இறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.