சென்னை
நாளை காலை 8 மணிக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
கடந்த 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடந்தன. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை காலை 8 மணிக்கு இந்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்க உள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கை 74 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வாக்குச் சீட்டுகள் மூலம் நடந்துள்ளது. எனவே முன்னணி நிலவரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு மேல் தெரிய வரும். வாக்குகள் அனைத்தும் மாலைக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதி கிடையாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.