சென்னை,

ள்ளாட்சி தேர்தலில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அறிவிப்பு வெளியிடபாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம், ஐகோர்ட்டின் தீர்ப்பில் விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஐகோர்ட்டின் உத்தரவை மதிக்க தவறியதாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம்  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்,  நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்  என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும்  உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல், தீர்ப்பில் விளக்கம் கேட்டு, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் அறிவிப்பு மீண்டும் தள்ளி போயுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.