நடராஜன் உடல்நிலை: கர்நாடக கோர்ட்டில் பரோல் கேட்டு சசிகலா மனு!

பெங்களூரு:

டல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இன்று கர்நாடகா கோர்ட்டில் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பாக அவரது வழக்கறிஞர்கள், அவரது கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை சந்திக்க  சசிகலாவுக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிட மான நிலையில் உள்ளது.

இன்று அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உடல்நிலை மோசமடைந்த நிலையில் தனது மனைவி சசிகலாவை பார்க்க நடராஜன் விரும்பியதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறியது.

இந்நிலையில் நடராஜனை பார்க்க அவரது மனைவி சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரு கோர்ட்டில் பரோல் கேட்டு சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
sasikala's lawyer files for Parole application in the Karnataka Court