சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறாமல் இருந்து 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணையம்அறிவித்து இருந்தது. தொடர்ந்து அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல், காலியாக உள்ள பதவிகளுக்கான 28 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவும்அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.