பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மத்திய அரசு சுகாதாரக் குழுவினரை மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து மத்திய குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளும் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளது.