கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா திரிணமூல் கட்சியில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந் நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா திரிணமூல் கட்சியில் இன்று தம்மை இணைத்து கொண்டார்.

அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் இன்றைய அரசு மக்களை நசுக்குகிறது. பாஜக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறியுள்ளன.

இப்போது யார் பாஜக உடன் உள்ளனர்? ஜனநாயகத்தின் வலிமை என்பது ஜனநாயக நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதில் தான் இருக்கிறது. ஆனால் தற்போது நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பலவீனமாகி விட்டன என்று கூறினார்.