சென்னை:

2வது கட்ட ஊரகப்பகுதிகளான தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று  158 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.  மொத்தம்91 ஆயிரத்து 975 உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு 27-12-2019ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று (30-12-2019) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில்  உள்ள 158 ஒன்றியங்களில்  ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஊ.ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதறக்க 27 மாவட்டங்களில் 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,551 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குச்சாவடிகளில் 61,000 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது

வாக்குப்பதிவை தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதுபோல, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டஉள்ளது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய வெள்ளை நிற வாக்குச்சீட்டிலும்,  கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்ய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டிலும்,  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய மஞ்சள் நிற வாக்குச்சீட்டிலும்,  ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்ய பச்சை நிற வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் செலுத்த வேண்டும்.