டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 2 கட்டங்களாக விலக்கு அளித்தது. இச்சலுகை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்று உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றை விசாரித்த நீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வங்கிக் கடன் தவணை காலத்தில் வட்டிக்கு, வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில், மத்திய அரசு சுப்ரீம்கோர்ட் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் வங்கி கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று தெரிவித்தது. மத்திய அரசின் பதிலை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கை இன்று ஒத்தி வைத்தது. இந் நிலையில் வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு  தள்ளி வைத்துள்ளது.