சென்னை

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிபதாக தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம் எல் ஏ புகழேந்தி மரணத்தையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.

இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் உள்ளிட்டவற்றை வீணாக்க விரும்பவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக (பாஜக கூட்டணி), நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையல் இந்த 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.