அயோத்தி: பாஜக மூத்த நிர்வாகிகளான  எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு,  ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக  ராமர்கோவில்   அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்து உள்ளார்.  ராமர்கோவில் அமைய அடித்தளம் அமைத்த அத்வானி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறுகையில், வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,  எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஜன நிகழ்வுக்கு “வரவேண்டாம்”  ராமர் கோவில் அறக்கட்டளை  சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மூத்த தலைவர்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்பட பலர் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட பலர் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். இதில்  அத்வானிதான் ராமர்கோவில் இயக்கத்தை தொடங்கி வைத்து, இன்று அயோத்தியில் ராமர்கோவில் உருவாக காரணமாக இருந்தவர். ஆனால், அவரையே கோவில் கும்பாபிஷேகத்துக்கு வர வேண்டாம் என்று ராமர்கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது  நிகழ்ச்சி இந்துத்துவாக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுடன், பாஜக மற்றும் ராமர்கோவில் அறக்கட்டளை மீது  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்

2024ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி  அன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.  இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில்,  பங்கேற்க, ராமர் கோவில் அறக்கட்டளை தரபிபல் இருந்து, குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமிதாப் பச்சன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் என விஐபிக்கள் லிஸ்ட் மட்டுமே 3 ஆயிரத்திற்கும் மேல் மட்டுமின்றி  மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. இதுதவிர நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வர வாய்ப்புள்ளது.

ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டதும், அயோத்தி நகரம் ஆன்மீக மற்றும் சுற்றுலா ரீதியில் பெரிய வளர்ச்சியை காணும்.  நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலமாக அயோத்தி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஏராளமானோர்   ஜனவரி 22ஆம் தேதியை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் மிக முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஒரே நாளில் அதிகப்படியான பக்தர்கள் வந்து அயோத்தியை திக்குமுக்காட செய்து விடாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஜனவரி 22, 2024 அன்று ராம் லல்லா சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும்.

இதையொட்டி, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறியுள்ளது. எனவே இந்த வசதிகளை பயன்படுத்தி கொண்டு நிதானமாக வந்து தரிசனம் செய்யுங்கள் எனக் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து தர முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் அடிப்படையான உணவை அளிக்க முடியும். ஏசி வசதி அளிக்க முடியுமா எனவும் தெரியாது. ஆனால் படுத்து உறங்க பாதுகாப்பான இடத்தை அளிக்க முடியும் என்று ராமர்கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

ந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்,  ராமர்கோவில் கும்பாபிஷேகம்  ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், ஜனவரி 15 ஆம் தேதிக்குள் ஏற்பாடுகள் நிறைவடையும் என்றும், பிரான் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலருக்கு அழைப்பு விடுவிடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசியவர்,    அயோத்தியில் ராமர் கோயில் கோரி போராட்டத்தில் முன்னணியில் இருந்த பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உடல்நிலை மற்றும் வயது காரணமாக  ராமர்கோவில்  கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றவர்,  “இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் , அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்,” என்றவர், தற்போது  அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயதாகிறது என்றும்  கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ராய்,  “ஆறு தரிசனங்களின் (பண்டைய பள்ளிகள்) சங்கராச்சாரியார்கள் மற்றும் சுமார் 150 துறவிகள் மற்றும் முனிவர்கள் விழாவில் பங்கேற்பார்கள்” என்று திரு ராய் கூறினார். விழாவிற்கு சுமார் 4,000 புனிதர்களும் 2,200 விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். காசி விஸ்வநாத், வைஷ்ணோ தேவி போன்ற முக்கிய கோவில்களின் தலைவர்கள் மற்றும் மத மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர், என்றார்.

ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அருண்கோவில், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், ஐ.எஸ்.ஆர்.ஓ. நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ராமர்கோவில்  கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்கு மரபுகளின்படி நடைபெறும். ஜனவரி 23ஆம் தேதி கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றவர்,  அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்கள் மற்றும் வீட்டு குடும்பங்கள் மூலம் 600 அறைகள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அயோத்தி  நகராட்சி ஆணையர் விஷால் சிங், பக்தர்களுக்காக ஃபைபர் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்றும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படும் என்றும் ராம ஜென்மபூமி வளாகத்தில் ராமர் வாழ்க்கையின் 108 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் ‘ராம் கதா குஞ்ச்’ தாழ்வாரம் கட்டப்படும், என்றார்.

ராமர்கோவில் கட்ட அடித்தளம் அமைத்தவர் அத்வானி:

1990ம் ஆண்டு செப்டம்பரில் பாஜக தலைவர் எல்.கே. அயோத்தி இயக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அத்வானி பாதயாத்திரை செல்ல முடிவு செய்தார். 1989 தேர்தலின் போது பாஜகவின் முக்கிய தேர்தல் திட்டமாக  ராமர்கோவில் இயக்கம் அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து அத்வானி ரத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த யாத்திரை குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து புறப்பட்டு மத்திய இந்தியா வழியாக அயோத்திக்குச் சென்றது.  ஒரு தேர் யோசனை ஒரு பெரிய அணிதிரட்டல் வேலை செய்தது. இந்துத்துவா ஆதரவாளர்கள் கோவில் மணிகளை அடித்தும், தாலிகள் அடித்தும், கோஷம் எழுப்பியும் ரதத்தை வரவேற்றனர். சிலர் ரதத்தில் திலகம் பூசி அதன் சக்கரங்களில் இருந்த தூசியை நெற்றியில் பூசினர்.

தொடங்கி  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்பு நடைபெற்றது. அதனால் பல பயங்கரவாத நிகழ்வுகளும் இந்தியாவில் அரங்கேறியது. எதிர்பார்த்தபடி, குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் கலவரம் வெடித்ததால் வகுப்புவாத பின்னடைவு ஏற்பட்டது. அத்வானி அக்டோபர் 30 அன்று அயோத்தியில் நடந்த கரசேவையை அடைவதற்கு முன்னதாகவே அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அக்டோபர் 23 அன்று சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டார்.

அத்வானியின் ரத யாத்திரைதான் பாஜகவின் வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டியது. மக்களிடையே இந்து ஆர்வத்தை தூண்டியது. இதன் எதிரொலி, கட்சியின் வாங்கு வங்கி அதிகரித்தது.  1989 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெறும்  85  இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, அடுத்து நடைபெற்ற  1991 பொதுத் தேர்தலில் 120 ஆக உயர்ந்தது. மேலும்  அத்வானி, நான்கு ரத யாத்திரைகளை மேற்கொண்டதால் அத்வானியின் வாழ்க்கையை நித்திய யாத்ரியாக  மாற்றியது, இருந்தாலும், அவரது, ரத யாத்திரை, பிஜேபியின் கழுத்தில் இந்துத்துவா கட்சி என்று முத்திரை குத்தியது.