கடலூர்
மீன்கள் தானாகவே உயிருடன் கரையில் ஒதுங்கியதைக் கண்ட கடலூர் மக்கள் அவற்றை அள்ளிச் சென்றுள்ளனர்.
மத்தி மீன்கள் என அழைக்கப்படும் ஒரு வகை கடல் மீன்கள் கடலூர் மாவட்டம் ராசாபேட்டை மீனவ கிராம கடற்கரையோரம் அலை அலையாய் உயிருடன் கரைக்குத் துள்ளி குதித்து வந்தன. அதைக் கண்ட மக்கள் மீன்களை அள்ளிச் சென்றனர்…
மீன்கள் தானாகவே உயிருடன் கரை ஒதுங்குவது ஓர் அபூர்வமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் இது போல நிகழ்ந்திருந்தாலும், இந்த அளவிற்கு மீன்கள் கரை ஒதுங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு அடியில் உள்ள மீன்களின் உணவான கடல்பாசி தட்ப வெப்ப நிலை காரணமாகக் கலங்கலாக மேலோங்கி எழுந்து வரும் போது, மீன்களும் மேலே வரும் என்றும் தட்பவெப்ப நிலை மாறிய பிறகு மீன்கள் மீண்டும் கடலுக்குள் சென்று விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.