ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நியாய விலைகடையில் வாங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரேசன் கடையில் அப்பகுதி மக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏழை மக்களுக்கு குறைந்த விலையிலும், பலருக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசிகள் தரமற்றவை என குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், தற்போது ரேசன் அரிசிக்குள் உயிருடன் எலிக்குஞ்சுகள் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்றதும், ரேசனில் நல்ல தரமான அரிசி வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், எந்தவித மாற்றமுமின்றிதான் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொது விநியோக திட்டம் என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் இருந்து நடுத்தர வர்க்கத்தினர் முதல் பலனிக்கக்கூடியது. ஆனால், அவர்களுக்கு  நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படம் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு என பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் தரமற்று உள்ளதுடன், கோதுமை, பருப்பு போன்றவைகளில் ஏராளமான குப்பை கூளங்களும் காணப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத.

இதற்கிடையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் இல்லாமல், உண்ண முடியாத நிலையில் இருப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய புகார்களின் அடிப்படையில், இந்திய வாணிபக் கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்த மத்தியஅரசின் அதிகாரிகளி, தமிழக அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையால், சுமார் 9 லட்சம் டன், அதாவது சுமார் 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த நிலையில்தான், கடந்த 11ந்தேதி அன்று  , தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள  நியாய விலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சு கிடந்துள்ளது. அந்த பகுதியில்உள்ள பாலசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் மோகன், ரேசன் அரிசி வாங்கியுள்ளார். அப்போது அந்த ரேசன் அரிசி வாங்கிய மோகனின் பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலி குஞ்சுகள் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர், ரேசன் கடை முன்பு அந்த  அரிசியைகொட்டி ரேசன் கடை விநியோகஸ்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது மோகனுடன் சேர்ந்து ஊர்மக்களும் அவர்களிடம் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேசன் கடைகளை முறையாக பராமரிக்காததாலும், சுகாரதாரமற்ற வகையில் வைத்திருப்பதால்தான், அரிசி மூட்டைக்குள் எலி வசித்து வருவதும், குடும்பம் நடத்தி குஞ்சுகளை பொரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே  திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.